யாழ். இளவாலை- சாந்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்து வரும் நபரின் வளர்ப்பு நாயை அயலவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேட்கச் சென்ற நாயின் உாிமையாளருக்கும் அயல் வீட்டினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாய்த்தா்க்கம் முற்றிய நிலையில், அயல் வீட்டிலிருந்தவா்கள் நாயின் உாிமையாளா் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அவரின் வீட்டிற்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.