சாய்ந்தமருது நகரசபையை உருவாக்கும் நோக்கத்தில் கல்முனை மாநகர சபையைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சாய்ந்தமருது பிரதேசம் ஒரு நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும் சாய்ந்தமருது நகரசபையின் பதவிக் காலத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு குறித்த விசேட வர்த்தமானி ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி கல்முனை மாநகர சபை கலைக்கப்பட உள்ளதுடன், அன்றைய தினம் முதல் அதன் எல்லைகளும் மாற்றியமைக்கப்பட உள்ளன.
0 Comments